Friday, September 15, 2006

அரசியல் கூத்துகள்

சமீப காலத்தில் வாசித்த செய்திகளைச் சார்ந்த சில கேலிக்கூத்துகள், உங்கள் பார்வைக்கு :)

கேலிக்கூத்து 1: கார்கில் போரில் மரணமடைந்த 19 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீடுகளின் நிலப்பதிவு கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பான கோப்பை, செல்வி ஜெயலலிதா கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கெயெழுத்து இடாமல் வைத்திருந்ததாக கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார் ! இது போலவே, முன்பு இரண்டொரு முறை கலைஞர் குற்றம் சாட்டியபோது, புரட்சித் தலைவி அவற்றை மறுத்து, கலைஞரிடம் ஆதாரம் தருமாறு கேட்டதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள் ! மொத்தத்தில் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டுவதோடு சரி ! எதற்கும் ஆதாரம் தருவதில்லை ! பின் எதற்கு இம்மாதிரி ஸ்டண்ட் எல்லாம் என்று விளங்கவில்லை. சூப்பர் கேலிக்கூத்து ! இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் மக்களை மடையர்கள் என்று நினைக்கிறார்கள் போலும் !!!

கேலிக்கூத்து 2: ஜிப்மரில் (JIPMER) பணி புரியும் அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இரு தினங்களுக்கு முன், அங்கு பணி புரியும் செவிலிகள் ஜிப்மர் டைரக்டர் சுப்பராவை சூழ்ந்து கொண்டு, ஜிப்மரை autonomous நிறுவனமாக்கும் மத்திய சுகாதாரத் துறையின் திட்டத்தை கைவிடுதல் குறித்த அரசாணையை, அவர் உடனடியாக பெற்றுத் தராவிடில், அவருக்கும் "வேணுகோபால் கதி" (இதென்ன, 'ராமன் எ·பெக்ட்' மாதிரி வேணுகோபாலை வைத்து ஒரு சொல்லாக்கத்தையே உருவாக்கி விட்டார்கள்:)) ஏற்படும் என்று அச்சுறுத்தியிருக்கின்றனர். ஓரிரு வாரத்திற்கு முன், திரு.ராமதாஸ் ஜிப்மர் சென்று அலுவலர்களை சந்தித்து சமாதானம் பேசியிருக்கிறார். இதில் கேலிக்கூத்து என்னவென்றால், அவரே தன் மகனாகிய அமைச்சரிடம் பேசி, நிலைமை குறித்து ஓர் அறிக்கை விட்டிருக்கலாம் ! அல்லது, திரு அன்புமணியாவது, பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசியிருக்க வேண்டும். நடப்பதெல்லாம் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது ! வேணுகோபால் விஷயத்தில் சுறுசுறுப்பு காட்டியவர்கள் இப்போது மெத்தனம் காட்டுவது ஏனோ ?

கேலிக்கூத்து 3: முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு CPM பாலிட்பிரோவிலிருந்து, உடல்நிலை காரணமாக, விலக விருப்பம் தெரிவித்து விடுத்த கோரிக்கையை பாலிட்பிரோ நிராகரித்து விட்டது. அவருடைய அனுபவமும், அறிவுரையும் கட்சிக்கு மிக அவசியம் என்று கரத் கூறியுள்ளார். ஒரு 93 வயது முதியவர் கட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற நினைக்கும்போது, அதை மதிக்காமல் அவரை நிர்பந்திப்பது நல்ல தமாஷ் ! CPM-இல் அனுபவம் / ஆற்றல் மிக்க ஆட்களே இல்லையா என்ன ? ஜோதிபாசு ஓய்வு பெறுவதில், கட்சிக்கு அப்படி என்ன பிரச்சினை ??? பாலிட்பிரோவில் என்னென்ன உள் பிரச்சினைகளோ, யாருக்குத் தெரியும் ???

எ.அ.பாலா

13 மறுமொழிகள்:

said...

//
அவருக்கும் "வேணுகோபால் கதி" (இதென்ன, 'ராமன் எ·பெக்ட்' மாதிரி வேணுகோபாலை வைத்து ஒரு சொல்லாக்கத்தையே உருவாக்கி விட்டார்கள்:))
//

:)))))))))

enRenRum-anbudan.BALA said...

Anony,
nanRi !

said...

//இதில் கேலிக்கூத்து என்னவென்றால், அவரே தன் மகனாகிய அமைச்சரிடம் பேசி, நிலைமை குறித்து ஓர் அறிக்கை விட்டிருக்கலாம் ! அல்லது, திரு அன்புமணியாவது, பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசியிருக்க வேண்டும். நடப்பதெல்லாம் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது ! வேணுகோபால் விஷயத்தில் சுறுசுறுப்பு காட்டியவர்கள் இப்போது மெத்தனம் காட்டுவது ஏனோ ?
//
அதானே, நல்ல கேள்வி ;-)

நாடோடி said...

துனைவியார், மனைவியார் கேலிக்கூத்து நடந்தது தெரியுமா?...

Hariharan # 03985177737685368452 said...

//திரு.ராமதாஸ் ஜிப்மர் சென்று அலுவலர்களை சந்தித்து சமாதானம் பேசியிருக்கிறார்.//

சமூக நீதிக் காவலர்கள் = "தன் சமூக" நீதி மட்டும் காப்பவர்கள்

said...

எங்கப்பா, நம்ம குழலி இன்னும் ஆஜராகலை, டாக்டர் அய்யாவை வாழும் தெய்வமா ஏத்துக்கிட்ட விசுவாசமான பக்தர், சாரி, தொண்டர் ஆச்சே அவரு.

**
துனைவியார், மனைவியார் கேலிக்கூத்து நடந்தது தெரியுமா?...
**
என்னாது அது ??????

மெளலி (மதுரையம்பதி) said...

//அமைச்சரிடம் பேசி, நிலைமை குறித்து ஓர் அறிக்கை விட்டிருக்கலாம் ! அல்லது, திரு அன்புமணியாவது, பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசியிருக்க வேண்டும். //

அதெல்லாம் செய்தால் அரசியல் என்ன ஆவது....என்னங்க நீங்க இது எல்லாம் எதிர் பார்க்கறீங்க....

enRenRum-anbudan.BALA said...

மணியன்.பே.க.சு, Hariharan, மெளல்ஸ்,

nanRi !

சரவணகுமார் said...

நேற்றைய தினமலரில் படித்தது

""""ஜிப்மரை'க் காப்பாற்றுங்கள்!

பெயர் வெளியிட விரும்பாத பெண் டாக்டர், புதுச்சேரியிலிருந்து எழுதுகிறார்:

நான் ஒரு டாக்டர்; புதுச்சேரியில் உள்ள "ஜிப்மரில்' படித்துத் தான் பட்டம் பெற்றேன். இன்று அது சில ஜாதிக் கட்சித் தலைவர்களிடம் சிக்கி சீரழிவதை காண சகிக்கவில்லை. நானும் வன்னியர் இனத்தை சார்ந்தவள் தான். ஆனால், அப்படி சொல்ல வெட்கித் தலைகுனிகிறேன்.

"ஜிப்மர்' மத்திய அரசுத் துறையின் கீழ் இருந்ததால் தான், என் போன்றோர் எங்கள் கல்வி செல்வத்தை மட்டுமே நம்பி பயன் பெற முடிந்தது. இன்று வேலையும் செய்ய முடிகிறது. ஆனால், இது தன் னாட்சி ஆக மாறி விட்டால் ஞாபகம் வைத்துக் கொள்ளுங் கள், கோடீஸ்வரர் வீட்டு பிள்ளைகள் மட்டுமே பட்டம் பெற முடியும். அதுவும் யாருக்கு என்பது "ஜிப்மர்' வளாகத்தில் முடிவு ஆகாது; இன்றுள்ள சூழ்நிலையில் தைலாபுரத்தில் தான் முடிவாகும்; சீட்கள் கோடிகளுக்கு மேல் விலை பேசப்படும்; கட் டணம் பல மடங்கு உயர்ந்து

விடும்; ஏழை மாணவர்கள் டாக்டர் ஆவது வெறும் கனவாக மட்டுமே இருக்க முடியும்.

பஸ் செலவுக்கு வெறும் ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு மற்ற மருத்துவ செலவுகளுக்கு பணம் தேவை இல்லை என நினைத்து வரும் ஏழை, எளியவர்கள் இனி வேறு இடம் பார்க்க வேண்டியது தான். ஏனென்றால், தன்னாட்சி; ஆனால், அது தனியார் மருத்துவமனை போல் மாறிவிடுவது நிச்சயம்.

ஜவகர்லால் நேரு எனும் ஒரு உன்னதமான மாமனிதர் புதுவைக்கு தந்த சீதனம் "ஜிப்மர்!' சோனியாவை நம் நாட்டு மருமகளாக ஏற்று நாட்டை நிர்வகிக்க நாம் அனுமதி தந்திருக்கிறோம். ஆனால், தான் வாழ வந்த வீட்டினர் அளித்த சீதனத்தை அவர் ஒரு ஜாதிக் கட்சிக்கு தாரை வார்க்க தயாரானது ஏன் என்று எனக்கு புரியவில்லை.

அதேபோல், புதுவையை ஆளும், "வாழும் காமராஜர்' என்று பெயர் பெற்ற முதல் வர் எல்லாவற்றுக்கும் இலவசம் என்கிறார். ஆனால், ஏழைகளுக்காக உயிரை காப்பாற் றும் மருத்துவத்தை இலவசமாக அளிக்கும், "ஜிப் மர்' மருத்துவமனையை காக்க முன்வரவில்லை. தேசியக் கட்சி ஒரு ஜாதிக் கட்சியிடம் பயப்படுகிறது.

என்னை சார்ந்தவர்களோ, என் குடும்பத்தாரோ யாரு மே ஜிப்மரில் பணியாற்றவில்லை. ஆனால், அது என் தாய் வீடு. எனக்கு கல்வி தந்த மகத்தான நிறுவனம். எனக்கு வாழ்க்கை தந்த நிறுவனத்தைக் காப்பாற் றினால், துõரத்தில் இருந்து பார்த்து மகிழ்வேன். ஆகவே, "ஜிப்மர்' இன்று காப்பாற்றப் பட வேண்டும்.""""""

கொஞ்சம் கொஞ்சமா கூறு போட்டு வித்துக்கிட்டு இருக்கானுங்களேடா...கூறு கெட்ட தமிழா....என்னது இதுவும் ஆரிய சதியா....சரிதான்...இனிமே ஆண்டவன் வந்தாலும் உன்னை காப்பாத்த முடியாது,,, Enjoy....

Enjoy எதுக்கா....

When you can't resist RAPE...ENJOY it.

enRenRum-anbudan.BALA said...

என்ன சரவணகுமார், ரொம்ப கடுப்புல இருக்கீங்க போல இருக்கு, யாரும் ஜிப்மரை ஒண்ணும் பண்ண முடியாது, கவலைப்படாதீங்க ! அம்மா கூட அறிக்கை விட்டு இருக்கிறதப் பார்த்தா, ஏதோ விவகாரம் போலத் தான் இருக்குது !!! கலைஞரை சாட்டிலைட் நகர் திட்டத்தை கைவிட வச்ச மாதிரி, ராமதாஸ் தன் அமைச்சர் மகனிடம் பேசி ஜிப்மரை autonomous ஆக்கறதை கை விட சொல்ல வேண்டியது தானே ! ஒண்ணும் செய்யாம இருக்கிறதப் பார்த்தா சந்தேகம் வலுக்கிறது.

said...

//
கொஞ்சம் கொஞ்சமா கூறு போட்டு வித்துக்கிட்டு இருக்கானுங்களேடா...கூறு கெட்ட தமிழா....என்னது இதுவும் ஆரிய சதியா....சரிதான்...இனிமே ஆண்டவன் வந்தாலும் உன்னை காப்பாத்த முடியாது
//
:)))))

said...

####
Enjoy எதுக்கா....

When you can't resist RAPE...ENJOY it.
####

;))))

சரவணகுமார் said...

Anonymous said...
####
Enjoy எதுக்கா....

When you can't resist RAPE...ENJOY it.
####

;))))



ஒரு அனானி enjoy பண்ணி smily போட்டுருக்காறே ??????

அனானி..கோவிக்காதீங்க...தமாசு :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails